×

பார்வையற்ற மூதாட்டியை பரிதவிக்க விட்ட அதிமுகவினர்

*காரியம் முடிந்ததும் எஸ்கேப்

*வாக்காளர்கள் கடும் அதிருப்தி

சேலம் : பார்வையற்ற மூதாட்டியை ஓட்டுப்போட காரில் அழைத்து வந்த அதிமுகவினர், காரியம் முடிந்ததும் கண்டு கொள்ளாமல் விட்டுச்சென்றதால் அவர் பரிதவித்து நின்ற சம்பவம் நடந்தது.இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்திருந்தது. அதே நேரத்தில், அரசியல் கட்சியினரும் சில இடங்களில் வாக்காளர்களை வாகனங்களில் வாக்கு மையத்திற்கு அழைத்து வந்தனர். தங்கள் கட்சிக்கு வாக்குகளை ஈர்ப்பதற்காக இந்த யுக்தியை கையாண்டனர். இதில் அதிமுகவினர், பார்வையற்ற மூதாட்டி ஒருவரை காரில் அழைத்து வந்து, ஓட்டு போட்டதும் கண்டு கொள்ளாமல் விட்டுச்சென்ற சம்பவம் நடந்தது.

சேலம் மாவட்டம், சங்ககிரி நட்டுவம்பாளையம் அரசு பள்ளியில், நாமக்கல் நாடாளுமன்றத் ெதாகுதிக்கான வாக்கு மையம் அமைக்கப்பட்டிருந்தது. நண்பகலில் அந்த வாக்கு மையத்திற்கு முன்பு, பார்வையற்ற மூதாட்டி ஒருவர், தட்டுமாறியபடி செய்வதறியாமல் திகைத்து நின்றார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, தனது பெயர் பாக்கியம்(80)என்றும், கரிமேடு பகுதியில் வசிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘இலை கட்சிகாரங்க ஒட்டுபோடுவதற்காக 4 பெண்களுடன், என்னை ஒரு காரில் இங்கு அழைத்து வந்தனர்.

நான் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்த போது காரையும், அவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடன் வந்தவர்களில் யாராவது வந்து பாதுகாப்பாக அழைத்துப்போவார்கள் என்று ஒரு மணிநேரமாக காத்திருக்கிறேன். ஆனால் யாரும் வரவில்லை. ரோட்ைட கடந்து போக கூட என்னால் முடியாது. இனிமேல் யார் கூப்பிட்டாலும் ஓட்டு போட வரமாட்டேன்,’ என்று விரக்தியுடன் தெரிவித்தார். இதையடுத்து அந்த வழியாக காரில் சென்ற இளைஞர்கள், மூதாட்டி வசிக்கும் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றனர். ஓட்டு போட்டவுடன் காரியம் முடிந்தது என்று அதிமுகவினர் மூதாட்டியை அம்போவென பரிதவிக்க விட்டுச்சென்ற சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

The post பார்வையற்ற மூதாட்டியை பரிதவிக்க விட்ட அதிமுகவினர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Salem ,India ,festival of democracy ,
× RELATED சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்...